விவசாய அமைச்சினால் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்பட்ட திரவ உரக் கேன்கள் வெடித்தமை தொடர்பில் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே கருத்து வெளியிட்டுள்ளார்.
சுமார் 8 லட்சம் விவசாயிகளுக்கு உயிர் உரம் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும், இதில் ஐந்தாறு கேன்களே வெடித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த திரவ உரங்களில் நைட்ரஜன் அதிகளவில் உள்ளதாகவும், அதன் அதிக செயல்பாடு காரணமாக வெடிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
எனவே இதனை முழு நாட்டிற்கும் நடந்த விடயமாக விளக்குவது தவறானது என தனது அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)