முஸ்லிம்களின் விடயத்தில் விடுதலைப்புலிகள் கையாண்ட வித்தையை சாணக்கியன் கையிலெடுத்துள்ளார்! இனியும் நாங்கள் ஏமாற தயாரில்லை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

முஸ்லிம்களின் விடயத்தில் விடுதலைப்புலிகள் கையாண்ட வித்தையை சாணக்கியன் கையிலெடுத்துள்ளார்! இனியும் நாங்கள் ஏமாற தயாரில்லை!


நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் முஸ்லிங்களுக்கு காணிப் பிரச்சினை இருக்கிறது. அதுகூட தெரியாமல் சிறுபிள்ளைத்தனமாக பாராளுமன்றத்தில் சாணக்கியன் பேசிக்கொண்டிருக்கிறார். தலையை துராவி கண்ணை பிடுங்கும் வேலை செய்துவரும் சாணக்கியன் எம்.பி கடந்த காலங்களில் தமிழீழ விடுதலைப்புலிகள் செய்தவற்றையே அவரும் செய்கிறார். 


முஸ்லிம் சமூகத்தை உசுப்பி தனது அபிலாஷைகளை வென்ற பின்னர் அந்த முஸ்லிம் சகோதரர்களை கொன்று குவித்த வரலாறுகளை நாங்கள் இன்னும் மறக்கவில்லை. வடக்கு கிழக்கின் இணைப்பு என்பது வெளிநாட்டு சக்தியான டயஸ்போராக்களின் விருப்பமாகும்.


வடக்கினையும் கிழக்கினையும் இணைத்து முதலமைச்சராக வருவதே சாணக்கியனின் விருப்பம் ஆகும். இந்த இந்த விருப்பத்திற்கு சாணக்கியன் ஒரு உந்துகோலாக இருந்து வருகிறார் என அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினரும் அக்கரைப்பற்று அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளன தலைவருமான எஸ்.எம். சபீஸ் தெரிவித்தார்.


இன்று (11) அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பகுதியில் உள்ள அவரது அலுவலகத்தில் விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது,


"சாணக்கியன் எம்.பிக்கு வரலாறு தெரியாது என தமிழ் பேசும் மக்கள் கூறியிருக்கிறார்கள். அதில் உண்மை இருக்கிறது. எனெனில் இன்று அவருக்கு பேச்சு திறமை இருக்கலாம். அதற்காக எல்லாவற்றையும் பேசி தன்னை ஒரு திறமைசாலியாக காட்ட முயற்சிக்கின்றார்.


ஆனால் அவருக்கு வரலாறுகள் தெரியாது.ஆனால் அவரது வரலாறு நம் எல்லோருக்கும் தெரியும். கடந்த காலங்களில் அவர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பட்டிருப்பு தொகுதி அமைப்பாளராக இருந்தவர். கிழக்கு - வடக்கு தொடர்பாக வரலாறு இன்னும் அவருக்கு தெரியாது.


ஏனெனில் அவருக்கு வயது போதாது. தற்போது 30 வயதினை தான் தாண்டியிருப்பார் என்று நினைக்கின்றேன். வடக்கில் மக்களுக்கு நடந்த துன்பங்கள் கிழக்கிலே மக்கள் எதிர்கொண்ட பிரச்சினைகள் எதுவும் அவருக்கு தெரியும் என்பதை நாம் நம்பவில்லை. அதனால் அவருக்கு அந்த அனுபவம் காணாது என்பதே எமதும் மக்களினதும் கருத்தாகும்.அவர் இப்பொழுது வெளிநாட்டு சக்திகளின் ஆசைகளை நிறைவேற்றுவதற்காகவே செயற்படுவதை அவதானிக்க முடிகின்றது. இவரது செயற்பாடு ஆடு நனைகின்றது ஓநாய் அழுதது என்ற செயலில் தான் உள்ளது. இன்று முஸ்லீம் மக்களுக்கு பிரச்சினை உள்ளது என்று கூறி திரிகின்ற இந்த வார்த்தைகள் இந்த பழமொழிக்கு ஒப்பானது என்பதை மக்கள் எல்லோரும் அறிவார்கள்.


இவரது தற்போதைய தேவையானது வடக்கினையும் கிழக்கினையும் இணைத்து முதலமைச்சராக வருவதே ஆகும். இந்த வடக்கு கிழக்கின் இணைப்பு என்பது வெளிநாட்டு சக்தியான டயஸ்போராக்களின் விருப்பமாகும். இந்த விருப்பத்திற்கு சாணக்கியன் ஒரு உந்துகோலாக இருந்து கொண்டு இருக்கின்றார். 


நாங்கள் அதை அனுமதிக்க முடியாது.


நீங்கள் சிங்கள மக்களுடன் வாழ முடியாது என்பதனால் தான் தனிநாடு கேட்டு போராடினீர்கள். அதுமாத்திரமன்றி வடக்கில் நிம்மதியாக முஸ்லீம் மக்களை வாழ அனுமதித்தீர்களா? அங்குள்ள அவர்களின் காணி பிரச்சினைகளை தீர்த்து கொடுத்துள்ளீர்களா?


அம்மக்களை அங்கு இதுவரை ஒழுங்காக குடியேற்றப்படாமல் தடுத்துள்ளீர்களே இதற்கு என்ன கூறுவது என்று கேட்கின்றேன்" என்றார்.


-நூருல் ஹுதா உமர்


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.