நத்தார் பண்டிகைக்கு உணவு சமைத்த எரிவாயு அடுப்பு வெடித்து சிதறியது!

நத்தார் பண்டிகைக்கு உணவு சமைத்த எரிவாயு அடுப்பு வெடித்து சிதறியது!


ஹட்டன் ருவன்புர காலனியின் முதலாம் பகுதியில் உள்ள வீடொன்றின் சமையலறையில் நேற்று (25) நத்தார் பண்டிகைக்காக சமையல் செய்து கொண்டிருந்த போது எரிவாயு அடுப்பு வெடித்துச் சிதறியதாக ஹட்டன் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


நத்தார் பண்டிகை தினத்தன்று தனது பெற்றோர் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு மதிய உணவு தயாரித்துக் கொண்டிருந்த போது எரிவாயு அடுப்பு திடீரென வெடித்ததாக வீட்டு உரிமையாளர் தெரிவித்துள்ளார்.


இந்த வெடிப்பு சம்பவத்தில் எரிவாயு அடுப்பு பலத்த சேதம் அடைந்ததுடன், அதிஷ்டவசமாக எவருக்கும் காயம் ஏற்படவில்லை.


ஹட்டன் பகுதியில் உள்ள லிட்ரோ எரிவாயு விநியோகஸ்தர் ஒருவரிடமிருந்து 15 நாட்களுக்கு முன்னர் இந்த எரிவாயு சிலிண்டரை வாங்கியதாக வீட்டு உரிமையாளர் தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.