ஜனவரி முதல் அனைவரும் தமது வீட்டு தோட்டங்களிலேயே பயிரிட்டுக்கொள்ள வேண்டும்! -வர்த்தக அமைச்சர்

ஜனவரி முதல் அனைவரும் தமது வீட்டு தோட்டங்களிலேயே பயிரிட்டுக்கொள்ள வேண்டும்! -வர்த்தக அமைச்சர்


எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் தமது வீட்டு தோட்டங்களில் சில பயிர்களை பயிரிடுமாறு வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


இரண்டாம் உலகப் போரின் போதும் உணவுப் பற்றாக்குறை இருந்தது என்றும் அவர் கூறினார்.


உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


“ஒவ்வொரு வீட்டிலும் ஒரு சில மிளகாய் செடிகள், ஒரு வட்டுக்காய் செடி மற்றும் கீரைகளை வளர்க்கவும். இவற்றை குறுகிய காலத்தில் பயன்படுத்த முடியும். விரைவுபடுத்தப்பட்ட விவசாய முறை ஒன்றை நாங்கள் முன்மொழிந்துள்ளோம். அதன்படி ஜனவரி முதல் தங்கள் சொந்த வீட்டு முற்றத்தில் ஏதாவது வளர்க்கவும். இரண்டாம் உலகப் போரின் போது, ​​கடுமையான உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டது." என்றார். (யாழ் நியூஸ்)


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.