தேரரின் கரங்களால் பட்டம் பெற மாட்டோம்! கொழும்பு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் எதிர்ப்பு!

தேரரின் கரங்களால் பட்டம் பெற மாட்டோம்! கொழும்பு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் எதிர்ப்பு!


கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தராக நியமிக்கப்பட்டுள்ள நாரஹேன்பிட்டி அபயராமதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரருக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கம் மற்றும் மாணவர் ஒன்றியத்தினால் எதிர்ப்பு வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்கப் போவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த நிகழ்வில் மாணவர்கள் கறுப்பு பட்டை அணிந்து கலந்துகொள்ள தீர்மானித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாணவர்கள் தங்களது பட்டத்தினை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பை துணைவேந்தரிடம் வழங்குமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.