இலங்கையில் எடை குறைந்த குழந்தைகள் பிறப்பு அதிகரிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கையில் எடை குறைந்த குழந்தைகள் பிறப்பு அதிகரிப்பு!


தெற்காசியாவில் குறைந்த எடை கொண்ட குழந்தைகள் இருக்கும் நாடுகள் வரிசையில் இலங்கையும் இணைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பு ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்தில் நடத்திய ஆய்வில், இலங்கை மற்றும் இந்தியாவில் எடை குறைந்த குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தெரியவந்துள்ளது.

இந்த நாடுகளை தவிர பப்புவா, நியூகினியா, மாலைதீவு, இந்தோனேசியா போன்ற நாடுகளிலும் எடை குறைந்த குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொரோனா தொற்று நோயின் பாதிப்பு காரணமாக இலங்கையில் எடை குறைந்த குழந்தைகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என சுகாதார அமைப்பு கூறியுள்ளது.

உணவு பாதுகாப்பு மற்றும் போஷாக்கு நிலைமை ஆபத்துக்கு உள்ளாகும் நாடுகள் வரிசையில் இலங்கையும் இருப்பதாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது. 

மேலும் உலகில் உணவு பொருட்களின் விலைகள் சடுதியாக அதிகரித்து வரும் நாடுகளில் இலங்கையும் ஒன்றென உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

-டெய்லி சிலோன்

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.