அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவுக்கு எஹலியகொட - வளமுத்த பிரதேசத்தில் கடும் எதிர்ப்புவெளிக்காட்டப்பட்டது.
அப்பகுதியில் குடிநீர் திட்டத்தை திறந்து வைப்பதற்காக வந்த அமைச்சரின் வாகனத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தினர்.
மேலும் ஆர்ப்பாட்டக்காரர்கள் அமைச்சரை நோக்கி கூச்சலிட்டு எதிர்ப்பை கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்திய நிலையில், அவரதுபாதுகாப்பு அதிகாரிகள் அவரை அங்கிருந்து வெளியேற்ற முயன்றனர்.
பின்னர் எஹலியகொட பொலிஸ் நிலைய அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வருகை தந்ததையடுத்து அமைச்சர் திறப்பு விழாவை கைவிட்டு அங்கிருந்து வெளியேறினார். (யாழ் நியூஸ்)