தற்காலிகமாக மூடப்பட்ட சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
நாளை மறுதினம் 7 ஆம் திகதி முதல் இதன் செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என அவர் உறுதிசெய்துள்ளார்.
இதேவேளை, தற்காலிகமாக மூடப்பட்ட சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை இந்தியாவுக்கு வழங்குவது தொடர்பில் வெளியான செய்தியை மறுத்திருந்த அவர்,
இதனை விரைவாக திறப்பதற்கே அரசாங்கம் எதிர்பார்க்கிறது என ஏற்கனவே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.