வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட “ கெசல்வத்தை ஃபவாஸ்”

வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட “ கெசல்வத்தை ஃபவாஸ்”

காரில் வந்த மர்மக் குழுவொன்று கொழும்பு - வாழைத்தோட்டம் ஓல்ட் யோர்க் வீதியில் வைத்து நபர் ஒருவரை வெட்டிப்படுகொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் நேற்று (04) இரவு இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவத்தின் போது கெசல்வத்தை ஃபவாஸ் (வயது - 32) என்பவரே இவ்வாறு வெட்டிப்படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

மேலும் தெரியவருகையில்,

இவர் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தாார்.

இந் நிலையில் கொலை சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைதுசெய்யப்படவில்லை. சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.
Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.