பாகிஸ்தானின் சியால்கோட்டில் படுகொலை செய்யப்பட்ட, பிரியந்த குமாரவின் வீட்டிற்கு கொழும்பு மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர், முஜிபுர் ரஹ்மான் வெள்ளிக்கிழமை (10) விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
இதன்போது பிரியந்தவின் தந்தை, மனைவி, மற்றும் 2 மகன்மார் முஜிபுர் ரஹ்மான் எம்.பி.யுடன் மிகவும் சுமூகமாக உரையாடியுள்ளனர்.
பிரியந்தவின் கொலை மூலம், தாங்கள் முஸ்லிம்களை விரோதிகளாக பார்க்கவில்லை எனவும், முஸ்லிம்களுடன் தாம் எந்தக் கோபமும் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் பிரியந்தவின் கொலையை அடுத்து, தமது வீட்டிற்கு ஆறுதல் கூற வந்த ஒரேயொரு முஸ்லிம் அரசியல்வாதி, முஜிபுர் ரஹ்மானே எனவும், தான் கொழும்பில் பணியாற்றிய போது, அதிகமான முஸ்லிம் நண்பர்கள் தமக்கு இருந்ததாகவும், பிரியந்தவின் தந்தை தனது கைகளை பிடித்தபடி கூறியதாகவும் முஜிபுர் ரஹ்மான் எம்.பி. ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் குறிப்பிட்டார்.
-அன்சிர்