இத்தகைய பின்னணியில் ஹம்பந்தோட்டை துறைமுகத்தில் இந்த தடையை மீறி சுமார் 60 மில்லியன் ரூபா பெறுமதியான வாகனம் தரையிறங்கியதாக நேற்று (10) எமக்கு செய்தி கிடைக்கப்பெற்றது.
இது ஜப்பானில் தயாரிக்கப்பட்ட அதிநவீன Toyota Land Cruiser 300, இலங்கையில் வரியுடன் சுமார் 60 மில்லியன் ரூபா பெறுமதியானது, ஆனால் வரியின்றி சுமார் 15 மில்லியன் ரூபா பெறுமதிக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலதிக தகவல் வெளியான நிலையில், இது இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் வரியின்றி இறக்குமதி செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டில் வாகனங்களை இறக்குமதி செய்வதை இலங்கை அரசாங்கம் இடைநிறுத்தியுள்ளது, ஆனால் இராஜதந்திர சேவைக்காக இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு இந்த சட்டம் பொருந்தாது என துறைமுக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)