கொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரவின் உடம் அடக்கம் செய்யப்பட்டது!

கொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரவின் உடம் அடக்கம் செய்யப்பட்டது!


பாகிஸ்தானின் சியல்கோட்டில் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த  பிரியந்த குமார தியவதன தனது அன்பு மனைவி, இரண்டு பிள்ளைகள் மற்றும் உறவினர்களிடம் பிரியாவிடை பெற்றுள்ளார்.


கடந்த வெள்ளிக்கிழமை பாகிஸ்தானில் பிரியந்த குமார தீவிரவாதக் கும்பலால் கொடூரமாக தாக்கப்பட்டு கொல்லப்பட்டார்.


பிரியந்தவிற்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக ஏராளமான இராஜதந்திரிகள், அரசியல்வாதிகள் மற்றும் நண்பர்கள் அவரது இல்லத்தில் பிரசன்னமாகியிருந்தனர்.


அவரது திடீர் மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர், கர்தினால் மல்கம் ரஞ்சித் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


சமய வழிபாடுகளுக்குப் பிறகு அஞ்சலி செலுத்தப்பட்டது.


 தொடர்ந்து பிரியந்தவின் சடலம் அவரது நண்பர்களால் கணேமுல்ல பொல்ஹேன மயானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு அடக்கம் செய்யப்பட்டது.Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.