எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக முச்சக்கர வண்டியில் வந்த பாராளுமன்ற உறுப்பினர்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக முச்சக்கர வண்டியில் வந்த பாராளுமன்ற உறுப்பினர்!

File Photo
நாட்டில் தற்போது, எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக ஆடம்பர வாகனங்களை பயன்படுத்த முடியாது எனக் கூறி, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா தானே முச்சக்கர வண்டியை ஓட்டிச் சென்றுள்ளார்.

பொருளாதார கஷ்டங்கள் காரணமாக முச்சக்கர வண்டியில் பயணிப்பதிலும் மக்களுக்கு சிரமமான நிலைமை ஏற்பட்டுள்ளதாக ஹர்ச டி சில்வா ஊடக சந்திப்பொன்றில் கூறியிருந்தார்.

எது எப்படி இருந்த போதிலும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா, தொடர்ந்தும் முச்சக்கர வண்டியில் பயணம் செய்வாரா அல்லது இது ஊடக கண்காட்சியா என்பதை அறிய மேலும் சில தினங்கள் காத்திருக்க வேண்டும் என அரசியல் அவதானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.