லிட்ரோ நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்பட்டு தற்போது உஸ்வெட்டகெய்யாவ கடற்பகுதியில் நங்கூரமிடப்பட்டுள்ள மற்றுமொரு கப்பலில் அடங்கியுள்ள சமையல் எரிவாயுவின் செறிமானம் தொடர்பில் ஐயம் நிலவுகின்றது.
இதற்கு முன்னர் தரம் இன்றி சமையல் எரிவாயுவினை இறக்குமதி செய்த நிறுவனமே இதனையும் இறக்குமதி செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது குறித்த கப்பலில் உள்ள சமையல் எரிவாயு மாதிரி, இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபனத்தின் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னதாக தரம் இன்றி இறக்குமதி செய்யப்பட்ட சமையல் எரிவாயுவினை தரையிறக்க வேண்டாம் என நுகர்வோர் அதிகார சபையின் அதிகாரிகள் லிட்ரோ நிறுவனத்திற்கு உத்தியோகப்பூர்வமாக அறிவித்தனர்.
இதேவேளை, 20 மில்லியன் அமெரிக்க டொலர் நாணய கடனாக விடுவிக்கப்படுமாயின் தமது நிறுவனத்தின் ஊடாக லிட்ரோ நிறுவனத்திற்கும் நாடளாவிய ரீதியாக சமையல் எரிவாயுவை விநியோகிப்பதற்கான இயலுமை உள்ளதாக லாப்ஸ் நிறுவனத்தின் தலைவர் டபிள்வ்.கே எச்.வேகபிட்டிய தெரிவித்துள்ளார்.