சீனர்களால் திபெத் நாட்டில் அதிகரிக்கும் கலாசார இனப் படுகொலை? சீன மொழியைக் கற்குமாறு ஆணை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சீனர்களால் திபெத் நாட்டில் அதிகரிக்கும் கலாசார இனப் படுகொலை? சீன மொழியைக் கற்குமாறு ஆணை!


திபெத்தின் மீதான சீனப் படையெடுப்பின் 70ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடி, சீன மொழி மற்றும் கலாசாரத்தைக் கற்று, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சியை ஏற்க வேண்டும் என சீனா அழைப்பு விடுத்துள்ளது.

சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங், திபெத்தியர்களை அதிகாரப்பூர்வ சீன மொழியான மெண்டரின் மொழியைக் கற்குமாறு கேட்டுக்கொண்டார். மேலும் புதிய நவீன சோசலிச திபெத்தையும், திபெத்திய மக்கள் சீன மயமாக வேண்டும் என்றும் கோரினார்.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி இமயமலைப் பகுதியில் தனது இரும்புக் கரங்களால் கலாசார இனப்படுகொலை செய்து வருகின்றது. வெகுஜன இணக்கத்தை உறுதி செய்வதாக கூறிக்கொண்டு தன்னாட்சி பிராந்தியத்தில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி புதிய கொள்கைகளை செயற்படுத்தி வருகின்றது.

திபெத்தில், தடைசெய்யப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் நடைமுறைகளில் இப்போது கோவில்களுக்குச் செல்வது மற்றும் ஜெபமாலை மணிகள், பிற மதப் பொருட்களைப் பயன்படுத்துவது ஆகியவை உள்ளடக்கப்பட்டுள்ளதோடு அவை தொடர்பில் கண்காணிப்புச் செயற்படுகளும் அதிகரித்துள்ளன.

கொள்கை ஆய்வுக்குழுவின் தகவல்களின் படி, பெய்ஜிங் இந்தச் சட்டங்களை மீறும் திபெத்திய பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் குறித்து புகாரளிக்க ஒவ்வொரு அலுவலகத்திலும் சமூகத்திலும் சிறப்பு முகவர்களை நியமித்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

தடைசெய்யப்பட்ட நடவடிக்கைகள் அல்லது நடைமுறைகளில் ஈடுபடும் எந்தவொரு நபரும் அரசாங்க ஊழியர்களாக இருந்தால் அதிலிருந்து நீக்கப்படுதல், அவருக்கான அனைத்து சிறப்பு உரிமைகளையும் மறுத்தல் மற்றும் கைது செய்யப்படுதல் உள்ளிட்டவற்றுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலைமை காணப்படுகின்றது.

நாட்டின் கலாசார மரபுரிமையை ஒழிப்பதற்காக, திபெத்திய மொழி இனி பாடசாலைகளில் கற்பிக்கப்படுவதில்லை என்றும் அதற்கு பதிலாக, மெண்டரின் மொழி கற்பிக்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பௌத்த பிக்குகளும் போலியாக முன்வைக்கப்படும் குற்றங்களுக்காக துன்புறுத்தப்பட்டு தண்டிக்கப்படுகின்றனர். மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் கூற்றுப்படி, கல்வி அமர்வின் போது பணியாளர்களுடன் தர்க்கம் செய்ததற்காக இரண்டு துறவிகள் முறையே 17 மற்றும் 15 ஆண்டுகள் சிறைத்தண்டனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த 10ஆம் திகதி திபெத்திய எழுத்தாளரும் கல்வியாளருமான கோ ஷெராப் கியாட்சோ, ஒரு தசாப்தத்திற்குப் பின்னர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

திபெத்தின் மீது சீனாவின் மக்கள் விடுதலை இராணுவம் படையெடுத்து அதன் கட்டுப்பாட்டைக் கைப்பற்றிய பின்னர் 1951 முதல் இமயமலைப் பகுதியை சீனா ஆட்சி செய்து வருகிறது.

மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் ஆய்வாளர்கள் கலாசார ஒருங்கிணைப்பை நோக்கிய இத்தகைய நகர்வுகள் திபெத்தின் பாரம்பரிய பௌத்த கலாசாரத்தின் அழிவை உச்சரிக்கின்றன.

கடந்த 70 ஆண்டுகளில் திபெத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை வைத்துப் பார்த்தால், திபெத்தியர்களின் மகிழ்ச்சி அடைவதற்கு எந்தவிதமான காரணமும் இல்லாத நிலைமைகளே நீடிக்கின்றன.

அமெரிக்காவை தளமாகக் கொண்ட அமைப்பொன்றின் அறிக்கையில். 70ஆண்டுகால அடக்குமுறைக்குப் பிறகு, திபெத்திய மக்களுக்கு இன்று முதல் சீனாவின் மிருகத்தனமான செயற்பாடுகளில் இருந்து அமைதியான விடுதலை தேவைப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.

பெய்ஜிங் தலாய் லாமாவை ஒரு ஆபத்தான பிரிவினைவாதி என முத்திரை குத்துகிறது, அதற்காக, தலாய் லாமாவை திபெத்தின் மிக உயர்ந்த மத நபராக பிரசாரம் செய்கின்றது. சீனாவின் கம்யூனிச ஆட்சிக்கு சவால் விடும் வகையில் திபெத்திய மக்களின் சுதந்திரப் போராட்டத்தின் அடையாளமாக தலாய் லாமா இருந்துள்ளார்.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு அடுத்த தலாய் லாமாவைத் தேர்ந்தெடுப்பதைக் கட்டுப்படுத்துவது முக்கிய விடயமாக உள்ளது.

இதனால், திபெத், ஜனாதிபதி ஷி உட்பட கட்சியின் உயர்மட்டத் தலைவர்களிடமிருந்து தொடர்ந்து கவனத்தைப் பெற்றது. சீனாவின் சோசலிச சமுதாயத்திற்கு ஏற்ப திபெத்திய பௌத்தம் வழிநடத்தப்பட வேண்டும் மற்றும் சீன சூழலில் வளர்க்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி ஷி கடந்த ஆண்டு கூறினார்.

இந்த ஆண்டு மே மாதம், தலாய் லாமாவின் வாரிசு யாராக இருந்தாலும் பெய்ஜிங்கால் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று சீனாவும் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டது.

அந்த அறிக்கையின்படி, கம்யூனிஸ்ட் கட்சி சீனாவின் ஆளும் மத்திய அரசாங்கத்தின் ஒப்புதலுக்கு உட்பட்டு அடுத்த தலாய் லாமாவை தெரிவு செய்வதற்கான நடவடிக்கைகளில் களமிறங்கியுள்ளது.

இந்தியாவில் உள்ள திபெத்திய சமூகத்திற்குள் இருந்து தலாய் லாமா தனது வாரிசை தேர்ந்தெடுக்கலாம் என்பது சீனாவின் மிகப்பெரிய அச்சம்.

தலாய் லாமா திபெத்திற்கு வெளியே ஒரு வாரிசைக் கண்டால், சீனா நியமிக்கும் வாரிசு சட்டபூர்வமான தன்மையையும் திபெத்தில் பயனுள்ள செல்வாக்கைச் செலுத்தத் தேவையான ஆன்மீக அதிகாரத்தையும் அனுபவிக்க மாட்டார். இதுவே சீனாவின் அச்சத்திற்கு காரணமாக உள்ளது.

-ஆதவன்

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.