66 மில்லியன் ஆண்டுகள் உடையாமல் கச்சிதமாக புதைந்திருந்த டைனோசர் கரு முட்டை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

66 மில்லியன் ஆண்டுகள் உடையாமல் கச்சிதமாக புதைந்திருந்த டைனோசர் கரு முட்டை!


சுமார் 66 மில்லியன் வருடங்கள் பழமைவாய்ந்த முழுமையாக விருத்தியடைந்த டைனோசர் கருவின் கண்டுபிடிப்பு தொடர்பான அறிவிப்பை விஞ்ஞானிகள் வௌியிட்டுள்ளனர்.

முட்டையிலிருந்து குஞ்சு பொறிந்து வெளியே வர தயாரான நிலையில் இந்த கரு உள்ளதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

டைனோசர் முட்டைக்கரு கச்சிதமாக உடையாமல் புதைந்திருந்ததாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தென் சீனாவில் உள்ள Ganzhou எனும் இடத்தில் இருந்து இது மீட்கப்பட்டுள்ளது.

அக்கரு பல் இல்லாத தெரொபாட் டைனோசர் (theropod dinosaur) அல்லது ஓவிரப்டொரொசராக (oviraptorosaur) இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. அதற்கு பேபி யிங்லியாங் (Baby Yingliang) என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

ஓவிரப்டொரொசர் என்றால் முட்டைகளைத் திருடும் பல்லிகள் என்று பொருள். தற்போது ஆசியா மற்றும் வட அமெரிக்க பகுதிகளில், 100 மில்லியன் முதல் 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன், இறக்கைகள் கொண்ட இந்த டைனோசர்கள் இருந்தன.

பேபி யிங்லியாங் தலை முதல் வால் வரை 10.6 அங்குல நீளம் கொண்டதாக உள்ளது. அந்த உயிரினம் 6.7 அங்குல நீள முட்டையில், சீனாவில் உள்ள யிங்லியாங் ஸ்டோன் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் உள்ளது.

இந்த முட்டை முதன்முதலில் 2,000ஆம் ஆண்டு வெளிக்கொணரப்பட்டது. அடுத்த 10 ஆண்டுகளுக்கு பத்திரமாக பாதுகாத்து வைக்கப்பட்டது.

அருங்காட்சியகத்தில் கட்டுமானப் பணிகள் தொடங்கிய போது, பழைய புதைபடிமங்கள் பிரித்து வைக்கப்பட்டன. அப்போதுதான் இந்த முட்டை குஞ்சு பொறிக்கும் நிலையில் கருவோடு இருக்குமோ என்கிற சந்தேகத்தின் அடிப்படையில் ஆராய்ச்சியாளர்கள் கவனம் இந்த டைனோசர் முட்டை மீது திரும்பியது.

டைனோசரின் ஒரு பகுதி உடல் பாறைகளால் மறைக்கப்பட்டுள்ளது. ஆராய்ச்சியாளர்கள் அதிநவீன ஸ்கேனிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி டைனோசரின் முழு உடலமைப்பை வெளிப்படுத்தும் எலும்புக் கூட்டின் படத்தை உருவாக்கி உள்ளனர்.

நன்றி: பிபிசி


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.