கொரோனா மரணங்களில் 31 வீதமானோர் தடுப்பூசி ஏற்றப்பட்டவர்கள்!

கொரோனா மரணங்களில் 31 வீதமானோர் தடுப்பூசி ஏற்றப்பட்டவர்கள்!

இலங்கையில் இதுவரை கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களில் 69 சதவீதமானோர் கொரோனா தடுப்பூசியைப் பெறவில்லை என சுகாதார அமைச்சின் ஊடகப் பேச்சாளர், சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

அதேநேரம், கொரோனா தொற்றினால் இறந்தவர்களில் 31 சதவீதமனோர் ஒரு டோஸ் அல்லது முழுமையாக தடுப்பூசி ஏற்றப்பட்டவர்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார். 

மேலும் கொரோனா இறப்புகளில் 77 சதவீதமானோர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் எனவும், 1.2 வீதமனோர் 30 வயதுக்குட்பட்டவர்களாகவும் இருப்பதாக அவர் கூறினார்.

அனைத்து இறப்புகளில் 81 வீதமானோர் ஏதேனும் ஒரு வகையான நாள்பட்ட நோயின் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் எனவும் அவர் கூறினார். (யாழ் நியூஸ்)

Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.