இலங்கையில் பதிவான 243 பெண் கொலைகள்! கணவர்கள் காரணம் என ஆய்வின் முடிவு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கையில் பதிவான 243 பெண் கொலைகள்! கணவர்கள் காரணம் என ஆய்வின் முடிவு!


இலங்கையில் கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இலங்கையில் இடம்பெற்ற 243 பெண்களின் கொலைகளில், 128 பேரை அவர்களின் சட்டப்பூர்வமான கணவன்மாரே செய்திருக்கின்றமை தெரியவந்துள்ளது.


ஐக்கிய நாடுகள் சபையின் சனத்தொகை நிதியம் மேற்கொண்ட ஆய்வொன்றில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.


விபத்துகள், தற்கொலைகள் மற்றும் பெண்கள் என்ற காரணத்துக்காகக் கொலைசெய்யப்படுதல் ஆகிய விடயப்பரப்பின் தகவல்களைத் திரட்டும் நோக்கில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.


இலங்கையில் இவ்வாறான ஆய்வொன்று மேற்கொள்ளப்பட்ட முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.


இதன்படி குறித்தக் காலப்பகுதியில் இடம்பெற்ற இயற்கைக்கு மாறான 243 மரணங்களில், 62 சதவீதமானவை குறித்த பெண்களின் சட்டபூர்வ கணவர் அல்லது முன்னாள் கணவர் அல்லது குடும்ப உறுப்பினர்களால் ஏற்படுத்தப்பட்டுள்ளது.


அதேவேளை, இவ்வாறான சம்பவங்களில் 69 சதவீதமானவை பதிவு செய்யப்படவில்லை என்றும் தெரியவந்துள்ளது.


இது ஆபத்தான விடயம் என்றும் ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.