மூதூர், தோப்பூர் பகுதியில் இடம்பெற்ற மிதிவெடி வெடிப்பு சம்பவத்தில் 15 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிர் பலியானவர் ஹாபிஸ் நளீப் எனும் மாணவன் என பொலிஸார் தெரிவித்தனர்.
வீட்டிலுள்ள ஆடுகளுக்கு இரை தேடிச் சென்று அருகிலுள்ள பாழடைந்த இடத்திலுள்ள மரக்கிளையை வெட்டிய சந்தர்ப்பத்திலேயே இவ்வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
படுகாயமடைந்த சிறுவன், தோப்பூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும், இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.