சமையல் எரிவாயு சிலிண்டர் வெடிப்புச் சம்பவத்தில் படுகாயமடைந்து கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பல்லேகல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் பிதுரு வெல்ல சந்தியில் உள்ள வில்கமுவ பிரதேசத்தில் வசிக்கும் மூன்று பிள்ளைகளின் தாய் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவரது பிள்ளைகள் கண்டி பிரதேசத்தில் உள்ள பாடசாலைகளில் கல்வி பயின்று வருவதாகவும், வசதிக்காக பல்லேகல பிரதேசத்தில் வாடகை வீடொன்றில் வசித்து வந்துள்ளதாகவும் எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனா்.
உயிரிழந்த பெண், டிசம்பர் முதலாம் திகதி அதிகாலை 3.00 மணியளவில் தனது பிள்ளைகளை பாடசாலைக்கு அழைத்துச் செல்ல தயாராகிக் கொண்டிருந்த போது வெடிப்பு மற்றும் தீ விபத்து ஏற்பட்டு பலத்த தீக்காயங்களுடன் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
10 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 10ஆம் திகதி உயிரிழந்தார்.
பல்லேகல பொலிஸ் பொறுப்பதிகாரி தலைமை பொலிஸ் பரிசோதகர் கிரிஷாந்த தலைமையில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.