மனைவியை கொடூரமாக கொலை செய்த நபர் 14 வருடங்களின் பின் சிக்கினார்!

மனைவியை கொடூரமாக கொலை செய்த நபர் 14 வருடங்களின் பின் சிக்கினார்!

தனது மனைவியை கட்டையால் கொடூரமாக தாக்கி கொலை செய்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இக்கொலை 2007 ஆம் ஆண்டு இடம்பெற்றதுடன் 14 வருடங்களின் பின்னர் கொலை செய்யப்பட்டவரின் கணவர் கைது செய்யப்பட்டார்.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சந்தேகநபர் 2007ஆம் ஆண்டு தலவாக்கலை தபால் நிலையத்தில் பணிபுரிந்து வந்தவர் எனவும், அப்போது தலவாக்கலை வட்டகொட தோட்டத்தில் வசித்து வந்தவர் எனவும் தெரியவந்துள்ளது.

மேலும் சந்தேக நபருக்கு 49 வயதான போது அவரது மனைவி தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து, 2009ஆம் ஆண்டு இவ்வாறு இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் விசேட விசாரணைகளை ஆரம்பிக்குமாறு நுவரெலியா நீதவான் நீதிமன்றம் கொழும்பு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிட்டது.

தற்போது 74 வயதுடைய சந்தேகநபர் எம்பிலிபிட்டிய துங்கம பிரதேசத்தில் கடந்த 14 வருடங்களாக தங்கியிருந்தமை பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து சந்தேகநபர் நேற்று (22) பொலிஸாரால் கைது செய்யப்பட்டதுடன், இன்று நுவரெலியா நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். (யாழ் நியூஸ்)

Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.