வடகொரியாவில் அமுலாகிய புதிய தடை - 11 நாட்களுக்கு சிரிக்கக்கூடாது!

வடகொரியாவில் அமுலாகிய புதிய தடை - 11 நாட்களுக்கு சிரிக்கக்கூடாது!

வடகொரியாவில் இருந்து தற்போது அடுத்த அதிர்ச்சிகரமான செய்தி வெளியாகி இருக்கிறது. நாட்டு மக்கள் அடுத்த 11 நாட்களுக்கு சிரிக்கக்கூடாது என வடகொரிய அரசாங்கம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வடகொரியாவின் தற்போதைய அதிபர் கிம் ஜோங் உன் (Kim Jong un) தந்தை கிம் ஜோங் இல் கடந்த 2011 ஆம் ஆண்டு மரணம் அடைந்தார்.

இதனால் வடகொரிய நாட்டு மக்கள் அடுத்த 11 நாட்களுக்கு சிரிக்கக்கூடாது, மது அருந்தக்கூடாது, பிறந்தநாள் விழாக்களை கொண்டாடக்கூடாது என வடகொரிய அரசாங்கம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

கிம் ஜோங் இல் இறந்த பிறகு ஒவ்வொரு ஆண்டும் இதே நடைமுறை வடகொரியாவில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த துக்கம் 10 நாட்களுக்கு கடைபிடிக்கபடும்.

ஆனால் இது கிம் ஜோங் இல் இறந்து 10 வது நினைவு ஆண்டு என்பதால் இந்த ஆண்டு 11 நாட்கள் துக்கம் கடைபிடிக்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த துக்க அனுசரிப்பின் போது பொதுமக்கள் மற்றும் தொழில்நிறுவனங்கள் தாங்கள் இருக்கும் பகுதியில் உள்ள பிச்சைக்காரர்களுக்கு உணவளிக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த காலத்தில், துக்க காலத்தில் குடித்துவிட்டுபோதையில் பிடிபட்ட பலர் கைது செய்யப்பட்டு குற்றவாளிகளாக நடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கைது செய்து அழைத்து செல்லப்பட்ட யாரும் இதுவரை திரும்பி வரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.