பாகிஸ்தான் - சியால்கோட் சம்பவத்தில், சித்திரவதை மற்றும் தூண்டுதலில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான ஃபர்ஹான் இத்ரீஸ் எனும் நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேலும் 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சியால்கோட்டில் இலங்கையர் ஒருவரின் உடலை சித்திரவதை செய்து எரித்ததாகக் கூறப்படும் சம்பவத்தைத் தொடர்ந்து பாகிஸ்தான் விசாரணை செய்து நீதியை உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்கும் என இலங்கை எதிர்பார்ப்பதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
சியால்கோட்டில் ஒரு கும்பல் இலங்கையர் ஒருவரை சித்திரவதை செய்து அவரது உடலை எரித்து கொன்றது, அதே நேரத்தில் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர அப்பகுதிக்கு பலத்த பொலிஸ் படை அனுப்பப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சியால்கோட்டில் உள்ள வசிராபாத் சாலையில், தனியார் தொழிற்சாலை ஊழியர்கள், அதன் ஏற்றுமதி மேலாளரை தாக்கி, அவரது உடலை எரித்து கொன்றதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், சியால்கோட்டில் தொழிற்சாலை மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதல் மற்றும் இலங்கை மேலாளர் உயிருடன் எரிக்கப்பட்ட சம்பவம் பாகிஸ்தானுக்கு அவமானகரமான நாள் என்று பாகிஸ்தான் பிரதமர் தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)