VIDEO: திடீர் தீ விபத்து - கொழும்பில் சம்பவம்!

VIDEO: திடீர் தீ விபத்து - கொழும்பில் சம்பவம்!

 
கொழும்பில் அமைந்துள்ள விளையாட்டு அமைச்சுக்கு அருகில் உள்ள தனியார் உணவகம் ஒன்றில் தீ விபத்து சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
இன்று (20) அதிகாலை 5.30 மணி அளவில் இந்த தீ விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.

இந்த தீ விபத்தினால் அப்பகுதியில் அமைந்துள்ள உணவக கட்டிடத்திற்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

உணவகத்தில் ஏற்பட்ட எரிவாயுக் கசிவினால் தீ விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக கொழும்பு மாநகர சபைக்கு சொந்தமான 6 தீயணைப்பு வாகனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சம்பவம் குறித்து கறுவாத்தோட்ட பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.