பிரித்தானியாவில் தீ விபத்தில் உயிரிழந்த இலங்கை குடும்பம்!

பிரித்தானியாவில் தீ விபத்தில் உயிரிழந்த இலங்கை குடும்பம்!


பிரித்தானியாவின் Bexleyheath பகுதியில் உள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்குண்டு இலங்கையர்கள் நால்வர் உயிரிழந்துள்ளனர்.

தென்கிழக்கு லண்டனில் உள்ள பெக்ஸ்லிஹீத் ஹெமில்டன் பகுதியில் பகுதியில் உள்ள வீடொன்றில் பிரித்தானிய நேரம் கடந்த 18 ஆம் திகதி இரவு 8.30 அளவில் இந்த அனர்த்தம் இடம்பெற்றதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை அனர்த்தத்தில் சிக்குண்டு இரண்டு பெண்கள் உட்பட, இரண்டு சிறுவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் குறித்த சம்பவத்தில் காயமடைந்துள்ள மற்றுமொரு நபர் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வீடு கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் கொள்வனவு செய்யப்பட்டுள்ள நிலையில் தீடீர் தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

இதேவேளை தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் யாழ். அராலி பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் தற்போது திருகோணமலை மற்றும் பிரித்தானியா ஆகிய இடங்களை விதிவிடமாக கொண்வர்கள் என தகவல்கள் வெளியாகியுள்ள போதிலும் பொலிஸாரினால் உத்தியோகப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.

இந்நிலையில் குறித்த சம்பவத்தில் உயிரிழந்துள்ள பெண்ணொருவர் நேற்றைய தினம் இலங்கைக்கு பயணிப்பதற்கு திட்டமிட்டிருந்தமை விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் இந்த சம்பவம் தொடர்பில் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.