இலங்கை தேசிய கொடி பொறிக்கப்பட்ட முகக்கவசத்தை அணிந்து வந்த FIFA தலைவர்!

இலங்கை தேசிய கொடி பொறிக்கப்பட்ட முகக்கவசத்தை அணிந்து வந்த FIFA தலைவர்!


சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் (FIFA) தலைவர் கியானி இன்பன்டினோ, இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கையை வந்தடைந்துள்ளார்.

ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடைபெறும் மகிந்த ராஜபக்ஷ கிண்ணத்திற்காக, நான்கு நாடுகள் பங்கேற்கும் இறுதிப் போட்டியில் இவர் விசேட அதிதியாகக் கலந்துகொள்ளவுள்ளார்.

வெற்றி பெறும் அணிக்கு வெற்றியாளர் கிண்ணத்துடன் 30 ஆயிரம் அமெரிக்க டொலர் ரொக்கப் பரிசும் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்று அனுராதபுரத்தில் ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்தித்து பேச்சு நடத்திய அவர், இலங்கையின் தேசியக் கொடி பொறிக்கப்பட்ட முகக்கவசத்தை அணிந்திருந்தமை அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.