பொது மக்களுக்கு லிட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

பொது மக்களுக்கு லிட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு!


இவ்வார இறுதியில் சுமார் 8 இலட்சத்துக்கும் மேற்பட்ட சமையல் எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகிக்க உள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

லாஃப் எரிவாயு உற்பத்தி தடைபட்டுள்ளதால் மிகை கேள்வியும் தங்கள் நிறுவனத்தின் மீது சுமத்தப்பட்டுள்ளமை தற்போதைய எரிவாயு தட்டுப்பாடுக்கு காரணமாக அமைந்துள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.

சில நாட்களாக காணப்படும் லிட்ரோ எரிவாயு தட்டுப்பாடு காரணமாக இன்றும் சில இடங்களில் மக்கள் வரிசைகள் நிற்பதை காணக்கூடியதாக உள்ளது.

வத்தளை, உஸ்வெட்டகேயாவ, தல்தியவத்தை எரிவாயு மிதவைக்கு எரிவாயுடன் கூடிய கப்பல் ஒன்று நேற்று வந்துள்ளதுடன், எரிவாயு விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, இந்த வாரத்தினுள் 8 இலட்சம் சமையல் எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகிக்க எதிர்ப்பார்த்துள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.