பாடசாலைகள் இயங்குவது தொடர்பில் புதிய நடைமுறை?

பாடசாலைகள் இயங்குவது தொடர்பில் புதிய நடைமுறை?


எதிர்காலத்தில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் பாடசாலைகளை நடாத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

கண்டியில் இன்று (19) இடம்பெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு அமைச்சர் இதனை தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அமைச்சர்,

"நாம் எம்மால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளோம். அனைத்து பாடசாலைகளுக்கும் நிதி வழங்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் அல்லது இரு குழுக்களாக பிரித்து ஒரு நாள் விட்டு ஒரு நாள் பாடசாலைகளை நடாத்துவது குறித்த கவனம் செலுத்தியுள்ளோம்.

மேலும் தற்போது 14.5 மில்லியன் தடுப்பூசிகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. கையிருப்பும் உள்ளது. 2.1 மில்லியன் கையிருப்பு உள்ளது. தடுப்பூசி தொடர்பில் எவ்வித பற்றாக்குறையும் இல்லை. பின்னர் 30 வயது முதல் 60 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும்." என்று கூறியுள்ளார். 

Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.