மீரிகம - குருநாகல் வரையான அதிவேக நெருஞ்சாலை எப்போது திறக்கப்படும்?

மீரிகம - குருநாகல் வரையான அதிவேக நெருஞ்சாலை எப்போது திறக்கப்படும்?


மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகம முதல் குருணாகல் வரையிலான பகுதி இம் மாத இறுதிக்குள் திறக்கப்படும் என வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.


வீதி ஒழுங்குகளை அடையாளப்படுத்துவது போன்ற சிறு வேலைகள் எஞ்சியுள்ளதாக அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் எஸ்.வி.எஸ் வீரகோன் குறிப்பிட்டார்.


நிலவும் கடும் மழை காரணமாக அந்த நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார்.


அதேநேரம், பொத்துஹெர முதல் ரம்புக்கனை வரையிலான அதிவேக நெடுஞ்சாலையின் பணிகள் 2024 ஆம் ஆண்டு நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


கடவத்தை – மீரிகம பகுதியின் நிர்மாணப் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.