திருத்தப்பட்ட சுகாதார வழிகாட்டல் வெளியானது!

திருத்தப்பட்ட சுகாதார வழிகாட்டல் வெளியானது!


எதிர்வரும் நவம்பர் 16 முதல் நவம்பர் 30 வரை பின்பற்ற வேண்டிய திருத்தப்பட்ட சுகாதார வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இதில் மறு அறிவித்தல் வரை பொதுக்கூட்டங்கள், நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.

புதிய விதிமுறைகளின் பிரகாரம்,

 1. தகுதி வாய்ந்த அதிகாரியின் அனுமதியின்றி மறு அறிவித்தல் வழங்கப்படும் வரை பொது மக்கள் ஒன்றுகூடுல், கூட்டங்கள் மற்றும் விழாக்கள் என்பனவற்றுக்கு அனுமதியில்லை.
 2. அதற்கமைய, தனிப்பட்ட கூட்டங்களின் போது மண்டபமொன்றில் மூன்றில் ஒரு பங்கினருக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ள அதேவேளை அந்த எண்ணிக்கை 100 ஐ தாண்டக்கூடாதென அறிவிக்கப்பட்டுள்ளது.
 3. தனிநபர் ஒருவரின் வீட்டில் ஒன்றுகூடுவதாக இருந்தால் 10 பேருக்கு மாத்திரமே அனுமதி.
 4. வௌியிடங்களில் தனியார் ஒன்றுகூட அனுமதி இல்லை.
 5. புதிய சுகாதார வழிகாட்டல் கோவைக்கு அமைய செயற்படாத நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
 6. மத வழிபாட்டுத் தலங்களில் தனித்தனியாக வழிபாடுகளில் ஈடுபட அனுமதி.
 7. சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள புதிய வழிகாட்டு நெறிமுறைகளுக்கு அமைவாகவே விசேட நிகழ்வுகள், பிரார்த்தனைகள் என்பன நடத்தப்பட வேண்டும்.
 8. கல்விப் பொதுத்தராதர சாதாரண தர மற்றும் உயர் தர வகுப்புகளுக்காக மாத்திரம் மேலதிக வகுப்புகள் 50 வீதமானவர்களின் பங்குபற்றலுடன் நடத்தப்பட வேண்டும்.
 9. திருமண நிகழ்வுகளில் நூற்றுக்கும் மேற்படாதவர்கள் கலந்துகொள்ள அனுமதியளிக்கப்பட்டுள்ளதுடன் மதுபான பாவனைக்கு அனுமதியில்லை.
 10. பார்வையாளர்கள் இன்றி விளையாட்டு போட்டிகளை நடத்த அனுமதி.
 11. திரையரங்குகளில் 50 வீதமானோருக்கு அனுமதி.

உள்ளிட்ட வழிகாட்டல்கள் வௌியிடப்பட்டுள்ளன.


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.