கத்தார் நாட்டுக்கான இலங்கை தூதுவரை சந்தித்த ஸ்கை தமிழ் மற்றும் துணிந்தெழு சஞ்சிகை குழு!

கத்தார் நாட்டுக்கான இலங்கை தூதுவரை சந்தித்த ஸ்கை தமிழ் மற்றும் துணிந்தெழு சஞ்சிகை குழு!


கத்தார் நாட்டுக்கான இலங்கை தூதுவர் மபாஸ் மொஹிதீன் மற்றும் ஸ்கை தமிழ் மற்றும் துணிந்தெழு சஞ்சிகை குழுவினருக்கிடையிலான சந்திப்பு இன்று காலை (15) கத்தார் நாட்டுக்கான இலங்கை தூதராலயத்தில் இடம்பெற்றது. 


ஸ்கை தமிழ் மற்றும் துணிந்தெழு சஞ்சிகையின் பணிப்பளார் ஜெ.எம்.பாஸித் மற்றும் ஓவிக் கலைஞர் நஸார் சர்பான் ஆகியோர் கத்தார் நாட்டுக்கான இலங்கை தூதுவர் மபாஸ் மொஹிதீனை சந்தித்து கட்டார் நாட்டில் ஓவியக் கலையில் தனது திறமையை வெளிக்காட்டி வரும் இலங்கையைச் சேர்ந்த நஸார் சர்பான் வரைந்த  ஓவியங்களை காண்பித்ததோடு, தூதுவரின் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் இதன்போது பெற்றுக்கொண்டனர். தற்போது கட்டாரின் கத்தாரா அரங்கில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஓவியக் கண் காட்சியில் இலங்கையை சேர்ந்த நஸார் சர்பான் வரைந்த ஓவியங்களும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


-நூருல் ஹுதா உமர்Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.