180 மில்லியன் பெறுமதியான கொகேய்னுடன் துனிசியா நாட்டு பெண்ணொருவர் கைது!

180 மில்லியன் பெறுமதியான கொகேய்னுடன் துனிசியா நாட்டு பெண்ணொருவர் கைது!


59 வயதுடைய துனிசியா நாட்டு பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.


சுமார் 180 மில்லியன் ரூபா பெறுமதியான 4 1/2 கிலோ கிராம் கொகேய்னுடன் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


குறித்த பெண் துனிசியாவில் இருந்து பிரேசிலுக்கு பயணித்து, அங்கிருந்து கத்தாருக்கு சென்று பின் இலங்கையை வந்தடைந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


மேலதிக விசாரணைகளுக்காக கைப்பற்றப்பட்ட கொகேய்னுடன் குறித்த பெண்ணை, போதைப் பொருள் ஒழிப்பு பிரிவிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.