இலங்கைக்கு புதிதாக நேரடி விமான சேவையை ஆரம்பிக்கவுள்ள பல விமான நிறுவனங்கள்!
advertise here on top
advertise here on top
happy kids fun world

இலங்கைக்கு புதிதாக நேரடி விமான சேவையை ஆரம்பிக்கவுள்ள பல விமான நிறுவனங்கள்!

நான்கு புதிய விமான நிறுவனங்கள் அடுத்த மாதம் முதல் இலங்கைக்கு நேரடி விமான சேவையை ஆரம்பிக்கவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

அண்மையில் நான்கு புதிய விமான நிறுவனங்கள் இலங்கைக்கு நேரடி விமான சேவையை ஆரம்பித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

அதன்படி, ரஷ்யாவின் AZUR விமான சேவையானது டிசம்பர் 03 ஆம் திகதி முதல் வாரத்திற்கு இரண்டு முறை இலங்கைக்கான விமான சேவையை ஆரம்பிக்கவுள்ளது. AIR ASTANA கஜகஸ்தானில் இருந்து இலங்கைக்கு நேரடி விமானங்களை வாரத்திற்கு இரண்டு முறை அதே தினத்தில் இயக்கும்.LOT POLISH ஏர்லைன்ஸ் டிசம்பர் 08 முதல் இலங்கைக்கு நேரடி விமான சேவையை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளது மேலும், NEOS விமான சேவை அடுத்த மாதம் 15 ஆம் திகதி முதல் இத்தாலியில் இருந்து விமான சேவையை ஆரம்பிக்கும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களில், AEROFLOT மற்றும் AIR FRANCE உட்பட நான்கு புதிய விமான நிறுவனங்கள் இலங்கைக்கு தங்கள் நேரடி விமான சேவைகளைத் தொடங்கியுள்ளன.கொவிட் தொற்றுநோய்க்கு முன்னர் சுமார் 37 விமான நிறுவனங்கள் இலங்கைக்கு விமானங்களை இயக்கியதாகவும், இதுவரை 17 விமான நிறுவனங்கள் பயணிகள் விமானங்களை மீண்டும் தொடங்கியுள்ளன என்றும் பிரசன்ன ரணதுங்க கூறினார்.

எட்டு விமான நிறுவனங்கள் சரக்கு போக்குவரத்தை மீண்டும் தொடங்கியுள்ளன. இலங்கைக்கான விமான சேவையை மீண்டும் தொடங்குவதற்கு முன்னர் இலங்கை வந்துள்ள அனைத்து நிறுவனங்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், இலங்கைக்கு நேரடி விமான சேவையை தொடங்குவது தொடர்பாக உலகெங்கிலும் உள்ள ஏனைய விமான நிறுவனங்களுடன் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன.


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.