தற்போதைய ஜனாதிபதி ஒரு கோழை.. அனுபவம் இல்லாத தலைவர்! 

தற்போதைய ஜனாதிபதி ஒரு கோழை.. அனுபவம் இல்லாத தலைவர்! 


1948 ஆம் ஆண்டுக்கு பின்னர் தற்போதைய அமைச்சரவை மிகவும் முட்டாள்தனமான அமைச்சரவை என இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் செயலாளர் டியூ குணசேகர தெரிவித்துள்ளார்.


அதேநேரம், ஜனாதிபதி ஒரு கோழை என்றும் அரசியல் அனுபவம் இல்லாத தலைவர் என்றும் அவர் கூறுகிறார்.


மேலும் தற்போதைய பாராளுமன்றத்தில் மாட்டு மந்தை இருப்பதாகவும் கூறுகிறார்.


அண்மையில் தான் அவ்வாறு கூறியதையடுத்து, பாராளுமன்றத்தில் பலர் தம்மை உரையாற்றி வாழ்த்து தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.


இந்த அறிக்கையின் பின்னர், ஜனாதிபதி தம்மை இரவு உணவிற்கு அழைத்ததாகவும் ஆனால் அவர் மறுத்துவிட்டதாகவும் அவர் கூறுகிறார்.


இணைய நேர்காணல் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்த கருத்துக்களை தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.