நான் வாகன தொடரணியைப் பயன்படுத்துவதில்லை! சந்திம வீரக்கொடி கூறியது பொய்! - ஜனாதிபதி

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நான் வாகன தொடரணியைப் பயன்படுத்துவதில்லை! சந்திம வீரக்கொடி கூறியது பொய்! - ஜனாதிபதி


ஜனாதிபதி அலுவலகத்தின் வாகனப் பயன்பாடு தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி, நேற்று பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையில் குறிப்பிட்ட விடயங்கள் உண்மைக்குப் புறம்பானதும் சரிவர ஆய்வு செய்யாமலும் முன்வைக்கப்பட்டவை என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


அப்பிரிவு இன்று (20) வெளியிட்டிருந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டிருந்ததாவது,


கடந்த இரண்டு வருடகால ஆட்சிக் காலத்தில், சவால்களுக்கு மத்தியில் குறைவான வளப் பயன்பாட்டுடன் பாரிய வேலைத்திட்டங்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நடைமுறைப்படுத்தி வருகின்றார்.   


நாடு பூராகவும் செயற்படுத்தப்பட்டு வருகின்ற திட்டங்கள் உள்ளிட்ட பாரிய வேலைத்திட்டங்களுக்காகப் பயன்படுத்தும் ஜனாதிபதி அலுவலகத்தின் கீழ் உள்ள முழுமையான ஊழியர்கள் மற்றும் வாகன எண்ணிக்கை என்பன, நல்லாட்சிக் காலத்திலிருந்த ஊழியர் மற்றும் வாகன எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பகுதியாகும். 


விடயம் இவ்வாறு இருக்கும்போது, சரியான தகவல்கள் அல்லது தரவுகளை ஆய்வு செய்யாமல், ஜனாதிபதி அலுவலகத்தின் வாகனப் பயன்பாடு தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி, நேற்று பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையில் குறிப்பிட்ட விடயங்கள் உண்மைக்குப் புறம்பானதும் சரிவர ஆய்வு செய்யாமலும் முன்வைக்கப்பட்டவை என்பதை இங்கு குறிப்பிட வேண்டும். 


ஜனாதிபதி உள்ளிட்ட ஜனாதிபதி அலுவலகத்தில் சேவை புரிகின்ற எந்தவோர் அதிகாரியும் வாகனத் தொடரணியைப் பயன்படுத்துவதில்லை என்பதை பொறுப்புடன் கூற வேண்டும். 


அதேபோன்று, அதிகாரிகள் தமது பதவிக்குரிய வாகனத்தைக்கூட பயன்படுத்தாது, கடமைக்கு ஏற்ற வகையில் பட்டியலில் உள்ள வாகனங்களையே குறித்த கடமையை நிறைவேற்றுவதற்காகப் பயன்படுத்துகின்றனர். 


அதனால், சந்திம வீரக்கொடி, உண்மையான விடயத்தை அறியாது, இவ்வாறு தவறான தகவல்களை முன்வைப்பது வருந்தத்தக்க விடயமாகுமென ஜனாதிபதி அலுவலகம் சுட்டிக்காட்டுகின்றது.



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.