முச்சக்கர வண்டி சாரதிகளுக்கான முக்கிய அறிவித்தல்! கட்டாயமாக்கப்படும் நடைமுறை!

முச்சக்கர வண்டி சாரதிகளுக்கான முக்கிய அறிவித்தல்! கட்டாயமாக்கப்படும் நடைமுறை!


நாடளாவிய ரீதியில் சேவையில் ஈடுபடும் முச்சக்கரவண்டி சாரதிகளுக்கான முக்கிய அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.


இதன்படி, பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் அனைத்து முச்சக்கர வண்டிகளுக்கும் மீட்டர் பொருத்துவது இனி கட்டாயமாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


கண்டியில் வைத்து இன்றைய தினம் (20) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போது போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம இதனை குறிப்பிட்டார்.


மேலும், எதிர்வரும் மூன்று மாதங்களில் மீட்டர் இன்றி பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகளுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.


அதேநேரம், நாட்டின் பல பாகங்களில் முச்சரவண்டி ஓட்டுனர்கள் வாடகை அறவீடுகளை எந்தவித முன்னறிவிப்பும் இன்றி பல மடங்குளாக அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்து வருகின்றனர். (யாழ் நியூஸ்)


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.