மன்னார் கடற்கரை பகுதியில் கரையொதுங்கிய மர்மப்பொருள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மன்னார் கடற்கரை பகுதியில் கரையொதுங்கிய மர்மப்பொருள்!


மன்னார் – சௌத்பார் இராணுவ முகாமிற்கு பின் பகுதியிலுள்ள கடற்கரை பகுதியில் இன்று (20) காலை மர்மப்பொருள் ஒன்று கரை ஒதுங்கிய நிலையில் அப்பகுதியில் சற்று பதற்றமான நிலை ஏற்பட்டிருந்தது.


குறித்த மர்ம பொருள் தொடர்பாக அப்பகுதி கடற்படையினர், மன்னார் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினருக்கு தகவல் வழங்கிய நிலையில் உடனடியாக அப்பகுதிக்கு பொலிஸார் மற்றும் அதிரடிப்படையினர் வருகை தந்தனர்.


குறித்த மர்ம பொருளானது பல்வேறு மின் சுற்றுக்களுடன் காணப்பட்ட நிலையில் அதிரடிப்படையினர் குறித்த மர்மப் பொதியை மீட்டு சோதனை செய்தனர்.


எனினும் குறித்த மர்மப் பொதியில் ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய எவ்வித பொருட்களும் இல்லை என தெரிய வந்துள்ளதுடன் குறித்த மர்ம பொருள் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.