அருஸீய்யத்துல் காதிரிய்யா தரீக்காவின் சர்வதேச அமைப்பின் ஆன்மீகத் தலைவர் இலங்கைக்கு வருகை!

அருஸீய்யத்துல் காதிரிய்யா தரீக்காவின் சர்வதேச அமைப்பின் ஆன்மீகத் தலைவர் இலங்கைக்கு வருகை!


ஆன்மிகத் தலைவர் அஷ்-ஷெய்க்ஹ் அப்ழலுல் உலமா அல்லாமா டாக்டர் தைக்கா அஹமத் நசீர் ஆலிம் அவர்கள், தம் அன்புத் தந்தையும், அரூஸீய்யத்துல் காதிரிய்யா தரீக்காவின் சர்வதேச அமைப்பின் ஆன்மீக தலைவருமான, குதுபுஸ் ஸமான் அஷ்-ஷைகுல் கமில் அப்ழலுல் உலமா அல்லாமா டாக்டர் தைக்கா ஷுஐப் ஆலிம் வலியுல்லாஹ் - ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் மறைவுக்குப் பிறகு, அரூஸீய்யத்துல் காதிரிய்யா தரீக்காவின் சர்வதேச அமைப்பின் ஆன்மீகத் தலைவராகப் பதவியேற்றார். 

2021 நவம்பர் 21 ஞாயிற்றுக்கிழமை முதல் 2021 நவம்பர் 28 ஞாயிற்றுக்கிழமை வரை, அவர்கள் இலங்கையில் தங்கி இருப்பார்கள்.

ஆன்மீக தலைவராக உத்தியோகபூர்வமாக பதவியேற்றதன் பின் அவர்கள் முதல் முறையாக இலங்கைக்கு வருகை தருகிறார்கள். அவர்களின் இந்த விஜயத்தின் போது இலங்கையில் பல பாகங்களுக்கும் சென்று அரூஸிய்யத்துல் காதிரீய்யா தரீக்காவின் முரீதீன்கள் மற்றும் சர்வமதத் தலைவர்கள், ஏனைய பிரமுகர்கள் பலரையும் சந்திக்கவுள்ளார்கள்.

இப்படிக்கு,
தலைவர்:
அல்-ஹாஜ் முஹிதீன் காதர்,
ஏற்பாட்டுக் குழு,
அரூஸீய்யதுல் காதிரிய்யா தரீக்காவின் கிளை - இலங்கை

Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.