அரபு மொழியில் உள்ள பெயர் பலகைகளை நீக்க அரசு முடிவு?

அரபு மொழியில் உள்ள பெயர் பலகைகளை நீக்க அரசு முடிவு?


கிழக்கு மாகாணத்தில் உள்ள சில வீதிகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள அரபு பெயர் பலகைகளை அகற்றுவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.

தேசிய மொழிகள் தவிர்ந்த ஏனைய மொழிகளிலுள்ள வீதிகளின் பெயர்களை நீக்குவதற்கும் இலங்கையின் பொதுச் சேவை ஆணைக்குழு மற்றும் நில அளவைத் திணைக்களத்தின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள புதிய சட்டமூலத்தின் மூலம் அந்தப் பெயர்கள் நீக்கப்படும் என நில அளவைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அரசாங்கத்தின் கூற்றுப்படி, பொது மக்களுக்கு பெயர் பலகை காட்சிப்படுத்த, சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும், மேலும் ஆங்கிலத்திற்கு இணை மொழியாக மூன்றாம் இடம் வழங்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)

Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.