நக்கிப் பிழைத்தலான அரசியலுக்கு இன்னொரு பெயர்தான் அபிவிருத்த அரசியல் என்றால் அந்த ம** அரசியல் எங்களுக்கு தேவையில்லை! -ரசானா மனாப்

நக்கிப் பிழைத்தலான அரசியலுக்கு இன்னொரு பெயர்தான் அபிவிருத்த அரசியல் என்றால் அந்த ம** அரசியல் எங்களுக்கு தேவையில்லை! -ரசானா மனாப்


கடந்த பாராளுமன்ற தேர்தல் நேரம் முஷாரப் என்பவர் பொதுஜன பெரமுன கட்சியை பகிரங்கமாகவே பொது மேடைகளில் விமர்சித்தார் மஹிந்த ராஜபக்ஷ அவர்களையும், கோட்டாபய ராஜபக்ஷ அவர்களையும் முஸ்லீம்களை கறுவறுக்க வந்தவர்களை போல ஒரு தோற்றப்பாட்டை ஏற்படுத்தி அவர்களுக்கு முஸ்லீம்கள் வாக்களிப்பது ஹராம் என கூறினார், அந்த வெறுப்பை அன்றைய மக்கள் கரகோஷம் செய்து வரவேற்றனர், அவரின் ஆதரவாளர்கள் அதை நியாயப்படுத்தினர், அதன் விளைவு மஹிந்த அன்ட் கோவுக்கு எதிரான வாக்குகளை கொண்டு வெற்றி பெற்று அதன் மூலம் பாராளுமன்ற உறுப்பினரானார்.

அன்று அவர் யாரை முஸ்லீம்களுக்கு எதிரானவராக காட்டி வெற்றி பெற்றாரோ அவர்களுடன் இன்று அவர் உறவாடுகிறார், சொந்தம் கொண்டாடுகிறார், அதையும் சரியென அவரின் முட்டுக்கள் நியாயப்படுத்தி நிற்கின்றனர், காரணம் கேட்டால் முஷாரப் அபிவிருத்தி அரசியல் செய்கின்றாராம் என்ற விளக்கம் முட்டுக்காய்களால் முன்வைக்கப்படுகின்றது.

பொத்துவிலில் மிக முக்கியமாக அடையாளப்படுத்தப்ட்ட 20 பிரச்சினைகளுக்கு தீர்வு பெறவேண்டும் என்றும் அந்த தீர்வை பெற வேண்டுமானால் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட வேண்டுமே தவிர அரசாங்கத்தை எதிர்க்க கூடாது என்று முட்டுக்காய்கள் வியாக்கியானம் முன்வைக்கின்றனர்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு, மக்கள் விடுதலை முண்ணனியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு, செய்யத் தெரியாத அபிவிருத்தி அரசியல் அரசியல் ஞானி முஷாரபிற்கு செய்யத் தெரிந்திருக்கிறது.

பொத்துவிலில் இருக்கும் பிரச்சினைகளை விட பல மடங்கு பிரச்சினைகள் தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் இருந்து கொண்டிருக்கிறது, அடிப்படை வசதிகள் அடிப்படை உரிமைகள் என்பவற்றை கூட போராடி சரி பெற்றுக்கொள்ள முடியாத நிலைமையில் என்னும் பல்லாயிரம் மக்கள் யாழ்ப்பாணம், வன்னி, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

அரசுடன் இணைந்து சென்றால் சமரச அரசியல் செய்து இந்த மக்களுக்கான தேவைகளையும், உரிமைகளையும் பெற்றுக் கொடுக்கலாம் தாமும் அமைச்சுப் பதவிகளில் உல்லாசமாக வாழலாம் என்கின்ற குறைந்தபட்ச சிந்தனை கூடவா தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களிடம் இல்லாமல் போனது??

உரிமைகளை விட்டுக்கொடுத்து சமரச அரசியல் செய்து கொண்டு செல்ல அவர்களுக்கும் தெரியும், இருந்தும் ஏன் அவர்கள் அவ்வாறு செய்யாமல் கடந்த ஒன்றரை தசாப்தங்களுக்கும் மேலாக எதிர்ப்பரசியல் செய்து கொண்டு வருகிறார்கள்?

ஏனெனில்...

நாயை போல் நூறு வருடங்கள் நக்கிப் பிழைப்பதை விட சிங்கம் போல் ஒரு வருடம் கர்ஜித்து வாழ்ந்தாலே போதும் என்று நினைப்பவர்கள் அவர்கள்.

அதனால்தான் இன்று ஒவ்வொரு பாராளுமன்ற அமர்விலும் அவர்களின் குரல் கர்ஜனையாய் ஒலிக்கின்றது. 

நக்கிப் பிழைத்தலான அரசியலுக்கு இன்னொரு பெயர்தான் அபிவிருத்தி அரசியல் என்றால் அந்த ம** அரசியல் எங்களுக்கு தேவையில்லை எங்கள் மக்கள் அபிவிருத்தி இல்லாமலே கௌரவமாக வாழ்ந்து மடியட்டும் என்று கர்ஜிக்கிறார்களே அவர்கள் கன்னியமானவர்கள்.

பொத்துவிலில் இருக்கும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கே முஷாரப் பாராளுமன்ற உறுப்பினராகி இருந்தால் பொதுஜன பெரமுன கட்சியை மக்களிடத்தில் விரோதியாக காட்டி அதன் மூலம் வெற்றி பெற்றிருக்க தேவையில்லை மாறாக பொதுஜன பெரமுன கட்சியில் போட்டியிட்டு வெற்றி பெற்று நக்கிப்பிழைத்திருக்கலாம் என்பதே எமது கருத்து.

-ரசானா மனாப் (முகப் புத்தகம்)
பொத்துவில்

Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.