இந்திய பிரதமரை விரைவில் சந்திக்கவிருக்கும் நிதி அமைச்சர் பசில்!

இந்திய பிரதமரை விரைவில் சந்திக்கவிருக்கும் நிதி அமைச்சர் பசில்!

நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

வரும் நாட்களில் புதுடெல்லியில் இந்திய பிரதமரை நிதியமைச்சர் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் நேற்று (22) செய்தியாளர்களிடம் கூறினார்.

"கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் மற்றும் புதுடில்லியில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் ஆகியவை விஜயத்தின் விவரங்களை இறுதி செய்து வருகின்றன" என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த விஜயத்தில் ஏனைய சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் இந்திய அரசாங்க அமைச்சர்களுடனான சந்திப்புகளும் உள்ளடங்குவதாக அமைச்சர் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ராஜபக்ச இந்தியாவில் இருந்து அதிக கடன்களைப் பெற மாட்டார் என்று கூறிய அவர், அதற்கு பதிலாக, நிதியமைச்சர் அதிக முதலீடுகளை நாடவும், இந்தியாவில் இருந்து சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கவும் கலந்துரையாடவுள்ளார் என அமைச்சர் பீரிஸ் தெரிவித்தார்.

“எங்களுக்கு இந்தியாவுடன் வலுவான உறவு உள்ளது. இது ஒரு பகுதியில் மட்டும் கவனம் செலுத்தவில்லை” என வெளிவிவகார அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

தேவை ஏற்படும் போது இலங்கைக்கு இந்தியா எப்போதும் உதவிகள் வழங்கி வருவதாக அமைச்சர் பீரிஸ் மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)
Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.