டொலர் இல்லை - பொருட்களுக்கான தட்டுப்பாட்டினை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்!

டொலர் இல்லை - பொருட்களுக்கான தட்டுப்பாட்டினை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்!

அந்நிய செலாவணி நெருக்கடியை தீர்க்கும் வரை, பொருட்களுக்கான தட்டுப்பாட்டினை ஏற்றுக்கொள்ள தான் வேண்டும்  என இணை அமைச்சரவை பேச்சாளர் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

அந்நியச் செலாவணி நெருக்கடிக்கு நீண்டகால தீர்வுகளை அரசாங்கம் எதிர்பார்த்து வருவதாகவும், குறுகிய கால வெளிநாட்டுக் கடன்களைப் பெற்று நிலைமையைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை தாம் கொமிஷனுக்கு பெற்றுக் கொண்டதன் காரணமாகவே அதனை மூட வேண்டிய நிலை ஏற்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் முன்வைத்த குற்றச்சாட்டையும் அவர் மறுத்ததோடு குறைந்த விலையில் எர்பொருளினை பெற முடியும் என்றால் அதனையும் கூறுமாறு அமைச்சர் எதிர்க்கட்சித் தலைவருக்கு அழைப்பு விடுத்தார்.

அவ்வாறான ஒருவரை முன்வைத்தால் அவரிடமிருந்து எரிபொருளைப் பெற்றுக்கொள்ளத் தயார் எனவும் இல்லையேல் எதிர்க்கட்சித் தலைவர் பொய் கூறியமைக்காக தேசத்திடம் மன்னிப்புக் கோர வேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை ஊடகவியலாளர் சந்திப்பில் திரு.கம்மன்பில இதனைத் தெரிவித்தார்.

ஏற்றுமதி வருவாயை விட இறக்குமதி செலவினம் அதிகமாக இருப்பதால் எரிவாயு உள்ளிட்ட சில இறக்குமதி பொருட்களுக்கு தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறிய அவர், சுற்றுலா மற்றும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் வருமானம் குறைவதால் இறக்குமதி மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். (யாழ் நியூஸ்)
Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.