எரிவாயு சிலிண்டர் விலை ரூ. 15,000 தொடக்கம் ரூ. 20,000 வரையில் விற்பனை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

எரிவாயு சிலிண்டர் விலை ரூ. 15,000 தொடக்கம் ரூ. 20,000 வரையில் விற்பனை!

12.5 கிலோ எடையுள்ள காலி எரிவாயு சிலிண்டர் (சிலிண்டர் மாத்திரம்) ரூ.15,000 முதல் ரூ.20,000 வரையிலான விலையில் கருப்புச் சந்தைக்காரர்களால் விற்கப்படுகிறது.

ஆன்லைன் விளம்பர தளங்களும் 12.5 எரிவாயு சிலிண்டருக்கு 12,000 முதல் 20,000 ரூபாய் வரை வசூலிக்கின்றன.

மேலும் 5 கிலோ எடை கொண்ட எரிவாயு சிலிண்டர் ரூ.8000-12000 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இரண்டு பெரிய எரிவாயு நிறுவனங்களும் பல மாதங்களாக தங்கள் நிறுவனத்தின் எரிவாயு சிலிண்டர்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படாமல் இருக்கின்றன.

எரிவாயு தட்டுப்பாட்டுக்கு முன், வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் சராசரியாக ரூ. 4,250 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

ஆனால் நெருக்கடி காரணமாக புதிய எரிவாயு சிலிண்டர்களை நுகர்வோருக்கு விற்பனை செய்வதை அந்நிறுவனங்கள் நிறுத்திவிட்டன. (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.