கொழும்பு - புதுக்கடை பகுதியில் வைத்து மூன்று சிறுமிகள், நேற்று (08) காலை முதல் காணாமல் போயுள்ளதாக அவர்களது உறவினர்கள் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் அந்த மூன்று சிறுமிகளையும் தேடும் நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வாழைத்தோட்ட பொலிஸார் தெரிவித்தனர்.
13 வயதுக்கும் 15 வயதுக்கும் இடைப்பட்ட சிறுமிகளே இவ்வாறு காணாமல் போயுள்ளனர். இந்த மூன்று சிறுமிகளும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாவர்.
அதில் இரண்டு சகோதரிகள் கொழும்பைச் சேர்ந்தவர்கள், மற்றைய ஒருவர் அவர்களது உறவின சகோதரி கம்பளையைச் சேர்ந்தவர். குறித்த கம்பளை சிறுமி கடந்த சில தினங்களுக்கு முன்னர் இங்கு குடும்ப திருமணமொன்றில் கலந்து கொள்வதற்காக கொழும்பு வந்துள்ளார். போலீசார் ஏற்கனவே ஆதாரங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர் மற்றும் அனைத்து அறிவுறுத்தல்களையும் பெற்றுள்ளனர்.
இதேவேளை, இந்த மூன்று சிறுமிகளையும் திங்கட்கிழமை இரவு 8.10க்கும், 9.30 மணிக்கும் இடையில், இராஜகிரிய பிரதேசத்தில் கண்டதாக அச்சிறுமிகளின் குடும்ப உறுப்பினரென தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட நபர் டுவிட்டர் பதிவொன்றை இட்டுள்ளார்.