நாட்டின் 08 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, கண்டி, நுவரெலியா, கொழும்பு, களுத்துறை, கேகாலை, இரத்தினபுரி, மாத்தளை மற்றும் குருணாகல் ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கையே இவ்வாறு நீடிக்கப்பட்டுள்ளது.