புதிய ஒமிக்ரோன் கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கு அடங்குமா? உலக நாடுகள் அச்சம்!
advertise here on top
advertise here on top
happy kids fun world

புதிய ஒமிக்ரோன் கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கு அடங்குமா? உலக நாடுகள் அச்சம்!


ஒமிக்ரோன் வகை வைரஸ் பரவி வருவதையடுத்து, ஜெனிவாவில் நடக்க இருந்த 12 ஆவது மாநாட்டை உலக வர்த்தக அமைப்பு ஒத்திவைத்துள்ளது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய யூனியனில் உள்ள பல்வேறு நாடுகளும் தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வருவோருக்கு பயணக் கட்டு்பபாடுகளை விதித்துள்ளனர்.


இந்நிலையில், இந்த புதிய வகை ஒமிக்ரோன் வைரஸுக்கு (பி.1.1.529) எதிராக தடுப்பூசி செயல்படுமா என்பதை உறுதி செய்ய இயலாது என்று ஃபைஸர் மற்றும் பயோஎன்டெக் மருந்து நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.


ஆனால், ஒமிக்ரோன் வைரஸுக்கு எதிராக அடுத்த 100 நாட்களில் வீரியம் மிகுந்த தடுப்பூசியை தயாரிக்க முடியும் என்று ஸ்புட்னிக் செய்திநிறுவனம் தெரிவித்துள்ளது.


தென் ஆப்பிரிக்காவில்தான் முதல்முறையாக இந்த ஒமிக்ரோன் வகை வைரஸ் கடந்த புதன்கிழமை உலக சுகாதார அமைப்பால் கண்டறியப்பட்டது. அதன்பின் ஹொங்கொங், போட்ஸ்வானா, இஸ்ரேல் நாடுகளிலும் இந்த வகை வைரஸ் கண்டறியப்பட்டது.


இதுவரை கண்டறியப்பட்ட வைரஸ்களில் மிகவும் வேகமாகப் பரவும் தன்மை கொண்டதாக இந்த வைரஸ் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள். முதன் முதலில் இந்த வைரஸ் தென் ஆப்பிரிக்காவில் கடந்த வாரம் கண்டறியப்பட்டது.


குறிப்பாக போட்ஸ்வானா நாட்டில் இரு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு கூட இந்த புதிய வைரஸ் தாக்கியுள்ளது.இந்த வகை வைரஸ், தடுப்பூசியை அதிகமாக எதிர்க்கும் தன்மை கொண்டவை, வேகமாகப் பரவும், கரோனாவின் அறிகுறிகளும் தீவரத்தன்மை கொண்டதாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள்.


இந்நிலையில் தடுப்பூசி நிறுவனங்களான ஃபைஸர், பயோஎன்டெக் நிறுவனங்கள் வீரியம் மிகுந்த ஒமிக்ரோன் கொரோனா வைரஸுக்கு எதிராக தங்களின் தடுப்பூசி சிறப்பாகச் செயல்படுமா என உறுதியாகத் தெரியாது எனத் தெரிவித்துள்ளனர்.


இது குறித்து ஃபைஸர், பயோஎன்டெக் நிறுவனங்கள் வெளியிட்ட அறிக்கையில், "தென் ஆப்பிரி்க்காவில் புதிதாகக் கண்டறியப்பட்ட ஒமிக்ரோன் வகைகரோனா வைரஸுக்கு எதிராக எங்கள் தடுப்பூசி செயல்படுமா என உறுதியாகத் தெரிவிக்க இயலாது. ஆனால், அடுத்த 100 நாட்களில் ஒமிக்ரோன் வைரஸுக்கு எதிராக வீரியம் மிகுந் தடுப்பூசியை தயாரிக்க முடியும், ஒப்புதலைப் பெற முடியும்.


அடுத்த 2 வாரங்களில் ஒமிக்ரோன் வைரஸ் குறித்த அதிகமான தகவல்கள், புள்ளிவிவரங்கள் கிடைத்துவிடும் என எதிர்பார்க்கிறோம். ஆனால், ஏற்கனவை பாதிப்பை ஏற்படுத்திவரும் டெல்ட்டா வகை வைரஸ்களில் இருந்து ஒமிக்ரோன் வகை வைரஸ் முற்றிலும் மாறுபட்டது. புதிய வகை வைரஸுக்கு ஏற்றார்போல் தங்களின் தடுப்பூசி செயல்படும் வகையில் ஏற்கனவே ஆய்வுகளைத் தொடங்கிவிட்டோம். ஆதலால், 06 வாரங்கள் முதல் 100 நாட்களுக்குள் ஒமிக்ரோன் வைரஸுக்கு எதிராக தடுப்பூசி தயாராகவிடும்" எனத் தெரிவிக்கப்பட்டது.


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.