தமிழ் சினிமாவின் பிரபல நடன இயக்குனர் சிவசங்கர் காலமானார்!
advertise here on top
advertise here on top
happy kids fun world

தமிழ் சினிமாவின் பிரபல நடன இயக்குனர் சிவசங்கர் காலமானார்!


தமிழ் சினிமாவில் நடன இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வந்த சிவசங்கர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.


கொரோனா தொற்று காரணமாக ஹைதராபாத்தில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். 


மேலும் அவரது மனைவி, மூத்தமகன் ஆகியோரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர்களும் ஹைதராபாத்தில் உள்ள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தனர்.


கடந்த சில தினங்களுக்கு முன்பதாக அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்பட்ட நிலையில், தற்போது அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


முன்னணி நடிகர்களுடன் இணைந்து, கண்ணா லட்டு தின்ன ஆசையா, தில்லுக்குதுட்டு, தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.


800க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றிய சிவசங்கர், ‘மகாதீரா’ படத்துக்காக தேசிய விருதும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


இவரது மரணம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், அவரின் மறைவிற்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.