இந்த நடவடிக்கை நாளை (30) முதல் அமலுக்கு வருகிறது.
பல அடுக்கு உருமாற்றம் பெற்ற புதிய வகை கொரோனா வைரஸான ஒமைக்ரான் தென்னாப்ரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பரவி வரும் நிலையில், அனைத்து வெளிநாட்டுப் பயணிகளுக்கும் நாட்டுக்குள் நுழைய தடை விதித்துள்ளது ஜப்பான்.
இந்த தடை உத்தரவு இன்று பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இது செவ்வாய்க்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் என்று ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா அறிவித்துள்ளார்.
வணிகர்கள், வெளிநாட்டு மாணவர்கள், வெளிநாட்டு தொழிலாளர்களுக்காக இந்த மாதத் தொடக்கத்தில் திறந்துவிடப்பட்ட எல்லைப் போக்குவரத்து மீண்டும் மூடப்படுவதை இந்த அறிவிப்பு வெளிக்காட்டுகிறது.
முன்னதாக, தென்னாப்ரிக்கா மற்றும் அதன் 8 அண்டை நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகளும், 10 நாட்கள் தனிமைப்படுத்துதலையும் ஜப்பான் அறிவித்திருந்தது. ஆனால், ஒமைக்ரான் வைரஸ் பல நாடுகளில் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து தற்போது இந்த புதிய கட்டுப்பாடு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
(யாழ் நியூஸ்)