எரிபொருள் இறக்குமதிக்கு இந்தியாவிடம் இருந்து அவசர கடன்!

எரிபொருள் இறக்குமதிக்கு இந்தியாவிடம் இருந்து அவசர கடன்!

கடும் நெருக்கடியில் உள்ள எரிபொருளை இறக்குமதி செய்வதற்காக இந்தியாவிடம் இருந்து 500 மில்லியன் டொலர் அவசரக் கடனாகப் பெற அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசாங்கத்தின் உயர்மட்ட தலைவர்கள் இந்திய அரசாங்கத்துடன் ஏற்கனவே கலந்துரையாடலை ஆரம்பித்துள்ளதாக அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்தார்.

பெற்றோலியக் கூட்டுத்தாபனம் டொலர் தட்டுப்பாட்டினால் கடும் நெருக்கடியை எதிர்நோக்கி வருவதுடன், எரிபொருள் இறக்குமதிக்கு தேவையான டொலர்களை பெற்றுக்கொள்ள முடியாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளது.

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமும் கடந்த வாரம் கச்சா எண்ணெய் இறக்குமதிக்கான டொலர் பற்றாக்குறை காரணமாக மூடப்பட்டதுடன், அதனை மீண்டும் திறக்கும் திகதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இதேவேளை, எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு மாதாந்தம் 350 மில்லியன் டொலர்கள் தேவைப்படுவதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தெரிவித்திருந்தார்.

பணத்தைக் பெறுவது கடும் நெருக்கடியாக மாறியுள்ளது என்றும் அவர் கூறினார்.

இதனைக் கருத்தில் கொண்டு, எரிபொருள் இறக்குமதிக்காக இந்தியாவிடமிருந்து 500 மில்லியன் டொலர் அவசரக் கடனாகப் பெற அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. (யாழ் நியூஸ்)
Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.