மரக்கறிகள் இன்றி மூடப்பட்ட நுவரெலியா மத்திய பொருளாதார நிலையம்!

மரக்கறிகள் இன்றி மூடப்பட்ட நுவரெலியா மத்திய பொருளாதார நிலையம்!

நுவரெலியா பிரதேசத்தின் மரக்கறி உற்பத்தியாளர்கள் நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்திற்கு மரக்கறிகளை விநியோகிக்க மறுத்ததன் காரணமாக நுவரெலியா பொருளாதார மத்திய நிலையம் இன்று 21 ஆம் திகதி மூடப்பட்டதாக அகில இலங்கை விசேட பொருளாதார மத்திய நிலையங்களின் சங்கத்தின் தலைவர் அருண சாந்த ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

நுவரெலியாவில் மரக்கறிச் செய்கையாளர்களுக்குத் தேவையான இரசாயன உரங்கள் மற்றும் விவசாய இரசாயனங்கள் வழங்கப்படாமையால் விளைச்சல் குறைப்புக்கு எதிராக நுவரெலியாவில் இன்று 21ஆம் திகதி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகவும் அறுவடையின் பின், பொருளாதார மையத்திற்கு காய்கறிகள் வழங்குவது தவிர்க்கப்பட்டதாகவும் அருண சாந்த ஹெட்டியாராச்சி ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

நாட்டிலுள்ள முழு மரக்கறிச் செய்கையாளர்களுக்கும் இரசாயன உரங்கள் மற்றும் விவசாய இரசாயனங்கள் வழங்கப்படாமையால், கொழும்பு மெனிங் சந்தை, தம்புள்ளை மத்திய பொருளாதார நிலையம் மற்றும் பல தம்புத்தேகம மத்திய பொருளாதார நிலையங்களுக்கு நாளாந்த மரக்கறி விநியோகம் வெகுவாகக் குறைந்துள்ளது.

தற்போதைய சூழ்நிலையில் இந்த பொருளாதார நிலையங்கள் எதிர்காலத்தில் மூடப்பட வேண்டிய நிலை ஏற்படும் எனவும் விவசாய அமைச்சின் உயர் அதிகாரிகள் இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியதன் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அருண சாந்த ஹெட்டியாராச்சி குறிப்பிடுகின்றார். (யாழ் நியூஸ்)
Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.